
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரமான புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகரம் புதிய நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையினை வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அனுப்பினர் -சாய்ந்தமருது அலியார் லெப்பே
