|
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு அணிகளுக்கிடையில் நடைபெற்ற அரசியல் மோதல். ஒரு அணி மஹிந்தவின் வெற்றிக்காக பாடுபட்டது. மற்றைய அணி அவரைத் தோற்கடிக்க பாடுபட்டது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு எங்கள் மீதான கவனம் குறைந்து விட்டது. அதன் காரணமாகவே நாங்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.
எனினும் முன்னைய நாடாளுமன்றத்தில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம். தற்போதைய நாடாளுமன்றத்தில் ஆறுபேர் வெற்றிபெற்றுள்ளோம். அத்துடன் எங்கள் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவே நாங்கள் பெற்றுக் கொண்ட வெற்றி,
நாடாளுமன்றத் தேர்தல் வரை எதிரும் புதிருமாக இருந்து வாக்கு கேட்டவர்கள் தற்போது இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப் போவதாக கூறி வருகின்றார்கள். உண்மையில் இது தேசிய அரசாங்கம் இல்லை.
தங்கள் வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள களவாணிகள் ஒன்று சேர்ந்து அமைத்துக் கொண்டுள்ள கூட்டுக் களவாணிகள் அரசாங்கம் என்று ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஹந்துன்னெத்தி விமர்சித்துள்ளார்.
|
Sunday, 30 August 2015
![]() |
இது தேசிய அரசாங்கம் அல்ல, கூட்டுக்களவாணிகளின் அரசாங்கம்--ஹந்துன்னெத்தி |
Loading...
