Sunday, 30 August 2015

மர்ஹும் அஸ்ரப்பின் மானம் காத்த அலி சாஹிர் மௌலானா


நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் ஹிஸ்புல்லாவின் கோட்டையில் அலி சாஹிர் மௌலானா  அவர்கள் பேட்டியிட்டு வெற்றி வாகை சூடி மர்ஹும் அஸ்ரப்பின்  மானத்தை  காத்த பெருமை அலி சாஹிர் மௌலானா அவர்களையே சாரும்.இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அவருக்கு மிகவும் நன்றிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரசின் ஏகோபித்த குரலாக ஒலிக்கப் போவது அலி சாஹிர் மௌலானா அவர்களின் குரலே அன்றி வேறில்லை .ஆதலால் அகில இலங்கை ரீதியில் இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த போராளிகள் பலர் தீர்மானித்துள்ளார்கள் .

தற்போதுள்ள அரசியல் கள  நிலையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அலி சாஹிர் மௌலானா அவர்களினால் மட்டுமே முடியும் . மற்றையோர் நக்குண்டார் நாவிழந்தார் என்ற ரீதியில் ஐந்து வருடம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கை கட்டி நிற்பவர்களாகவே இருப்பர் ..

ஆகையால் சகல முஸ்லிம் போராளிகளும் இவருக்கு உறுதுணையாய் இருப்பது தான் புத்தி சாலித்தனம். ஏன் எனில் இவர் மர்ஹும் அஸ்ரப்பின்  மானம் காத்தவர்

இவருக்கு அமைச்சுப் பதவி கொடுத்து அலங்கரிக்க மக்கள் பாடுபடவேண்டும் 



Loading...