|
153 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளன.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளன.
பதிவு செய்யாமல் இயங்கியமை, முறைப்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை, போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பணியாளர்களை அனுப்பி வைக்காமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரையில் குறித்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது
|