|
புத்தளம் வன ஜீவராசிகள் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசத்திலிருந்து புத்தளம் அலுத்கம 17ஆவது மைல்கல், மேல் புளியங்குளம், இப்பாலோகம காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 20 ஹெக்டேயருக்கும் அதிகமான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் அதிக காற்று வீசியதன் காரமாணமாகவே தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசி திணைக்களஅதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், சாலியாவௌ பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
|
