|
ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 30 வீதத்தினை மீளப்பெற்றுக் கொள்வதற்கான செயற் திட்டமொன்றினை தொழிலமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊழியர் ஒருவர் தாம் தொழில் புரியும் காலத்திலேயே தமது ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 30 வீதத்தினை மீளப்பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இத் திட்டம் செயற் படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 65,600 விண்ணப்பங்கள் இதற்காக அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
மேற்படி விண்ணப்பங்களிலிருந்து 3700 பேருக்கு இந்த பிரதிபலனை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாகவே அமைச்சு மேற்கொண்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் இத்திட்டத்தினை விஸ்தரிக்கும் நோக்குடன் மாவட்ட தொழில் ஆணையாளர்களுக்கூடாக இதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
|
Saturday, 26 September 2015
![]() |
ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 30 வீதத்தினை மீளப்பெறலாம் |
Loading...
