|
பிரித்தானியாவில் தாக்குதல் நடத்துவதற்காக 3000 க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த பாதுகாப்பு அமைப்பு ஒன்று தனது தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், 3000க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரித்தானியாவில் பதுங்கியுள்ளதாகவும் அவர்கள் மாபெரும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் MI5 மற்றும் தீவிரவாத தடுப்பு பொலிசார் பிரித்தானியாவை சுற்றியுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் லண்டன் நகரில் வசித்து வருகின்றனர். எனினும் மான்செஸ்டர், மேற்கு மிட்லாண்ட பகுதிகளிலும் அவர்கள் கனிசமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் பயங்கரமான தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
|
Saturday, 19 September 2015
![]() |
பிரித்தானியாவில் தாக்குதல் நடத்துவதற்கு 3000 ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்: எச்சரிக்கும் பாதுகாப்பு அமைப்பு |
Loading...
