Saturday, 19 September 2015

போதைப் பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் சரக்குக் கப்பல் பறிமுதல்


போதைப் பொருள் கடத்தப்படுவதாக சந்தேகத்தின் பேரில் கப்பலொன்றை மொம்பாசா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.சரக்குக் கப்பலொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மொம்பாசா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இக்கப்பலில் சுமார் 205 கொள்கலன்கள் காணப்பட்டன. தற்போது இவையனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மொம்பாசா தலைமைமைப் பொலிஸ் அதிகாரி பிரன்சிக் வன்ஜோகி தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரினர் உள்ளிட்ட கென்னிய பொலிஸ் குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையை நேற்று ( வியாழக்கிழமை) ஜி.எம்.ரி நேரப்படி இரவு 9 மணியளவில் ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலில் இருந்த கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரிகளின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து, துறைமுகத்தின் பிரதான வாயில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாத் கென்னிய அதிகாரிகள் குழுவொன்று மொம்பாசா கடலோரப் பகுதியில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருளைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையிலேயே போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக சந்தேகத்தின் பேரில் குறித்த கப்பல் சோதனையிடப்படுவதாக மொம்பாசாகுறிப்பிட்டனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இடம்பெறும் போதைப் பொருள் மற்றும் ஏனைய கடத்தல்களுக்கான முக்கிய தளமாகவும் மறு பொதியிடலை மேற்கொள்ளம் கேந்திர நிலையமாகவும் கென்னியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...