Sunday, 13 September 2015

நெல் கொள்வனவை அவதானிக்க 6 அமைச்சர்களை உள்ளடக்கி குழு

நெல் கொள்வனவை அவதானிக்க 6 அமைச்சர்களை உள்ளடக்கி குழு
நெல் கொள்வனவை அவதானிக்க 6 அமைச்சர்களை உள்ளடக்கி குழு
நெல் கொள்வனவு குறித்து அவதானம் செலுத்தி அதற்கான செயற் பாடுகளை மேற் கொள்ள  6 அமைச்சர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த 9 ஆம் திகதி  ஜனாதிபதி செயலகத்தில் முதற் தடவையாகக் கூடிய அமைச்சரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைக்கு அமைய, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க பீ.ஹரிசன், துமிந்த திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, மகிந்த அமரவீர, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இந்தக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் குழுவும் கடந்த 9 ஆம்திகதி கூடியிருந்ததோடு நெல் கொள்வனவு தொடர்பாக அவசியப்படும் நீண்டகால மற்றும் குறுகிய காலத்தீர்வுகள் குறித்து அதில் கலந்துரையாடப் பட்டது.  அதேபோன்று நெல் கொள்வனவுக்குத் தேவைப்படும் மேலதிக நிதிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பீ.ஹரிசன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், நெல் கொள்வனவை அரசு நிறுத்திவிட்டதாக பரப்புரை செய்யப்பட்டு வந்தாலும், அரசு அத்தகைய எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நெல்லைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்  என்றார். 
Loading...