பிரதமரின் பேச்சாளராக ரோஸி நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவியாகவும் ரோஸி சேனநாயக்க நியமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. ரோஸி சேனாநாயக்க, கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
