Thursday, 3 September 2015

இலங்கையில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; புள்ளிவிபரத் திணைக்களம்










இலங்கையில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்களும் 2012 ஆம் ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்களும் இடம்பெற்றுள்ளன.

2013 ஆம் ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரத்து 760 திருமணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 728 திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தகவலை இலங்கை சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.(நன்றி IBC )


Loading...