கனேடியக் குடியுரிமையை ஏற்கும்போது முகத்தை மூடியிருப்பதைத் தடை செய்வதற்கு சமஷ்டி அரசு எடுத்த முயச்சியை சமஷ்டி மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
குடியுரிமை ஏற்கும்போது முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதில் தவறில்லையென சமஷ்டி நீதிமன்றம் ஒன்று வெளியிட்ட தீர்ப்புக்கு எதிராக சமஷ்டி அரசு மேன்முறையீடு செய்தது.
அந்த மேன்முறையீட்டை விசாரணை செய்த நீதிமன்றம், சமஷ்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றவேண்டிய தேவை இல்லையென அறிவித்தது. முதலில் வழக்கைத் தொடர்ந்த ஒன்றாரியோவைச் சேர்ந்த ஸனெறா இஷாக் (Zunera Ishaq) என்ற பெண் ஒக்ரோபர் 19 ஆந் திகதி நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பதற்காக உடனடியாக முடிவை அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள்.
இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக கொன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் ஹாப்பர் குறிப்பிட்டார் .
