பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்தால் அவர்களுடன் இளவரசிக்கு ரகசிய தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கவே பெண் பாதுகாவலர்களை மட்டும் நியமித்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரி Express என்ற ஊடகத்திற்கு ரகசிய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இளவரசர் வில்லியமிற்கும் இளவரசி கேட் மிடில்டன்னிற்கும் திருமணம் நிச்சயம் ஆன நாள் முதல் இளவரசியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் வில்லியமின் தந்தையான இளவரசர் சார்லஸ் தான் முடிவெடுத்து வருகிறார்.
இருவருக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆன பின்னர், கேட் மிடில்டன்னின் தலைமை பாதுகாவலராக 43 வயதான Emma Probert என்ற பெண் பாதுகாவலரை இளரசர் சார்லஸ் நியமித்தார்.
எம்மாவின் பணிகாலம் முடிவடைந்த பிறகு, தற்போது Karen Llewellyn என்ற பெண் தலைமை பாதுகாவலராகவும், மற்றொரு பெண் குட்டி இளவரசர் ஜோர்ஜையும் குட்டி இளவரசி சார்லோட்டையும் பாதுகாத்து வருகிறார்.
இளவரசர் சார்லஸின் மனைவியான டயானாவிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்ததால், அவர் தன்னுடைய தலைமை பாதுகாவலருடன் ரகசிய உறவு வைத்துக்கொண்ட நிலைபோல கேட் மிடில்டன்னிற்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே சார்லஸ் கேட் மிடில்டன்னின் பாதுகாப்பில் தலையிடுவதாக கூறப்படுகிறது.
இளவரசி டயானாவின் முதல் தலைமை பாதுகாவலரான Ken Wharfe என்பவரிடம் டயானாவிற்கு நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனை அவரே பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியும் அளித்துள்ளார்.
இவருக்கு அடுத்ததாக டயானாவின் தலைமை பாதுகாவலராக Barry Mannakee என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவருடன் டயானாவிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கம் அரண்மனைக்கு தெரிந்த ஒரு விடயமாகும். இதனை டயானாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
Barry Mannakee தன் அருகில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறேன் என டயானா கூறியுள்ளதாக எக்ஸ்பிரஸ் என்ற அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த Barry Mannakee என்ற பாதுகாப்பு அதிகாரியின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த டயானாவின் கணவரான இளவரசர் சார்லஸ் அவரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
பின்னர், 1987ம் ஆண்டு மே 14ம் திகதி நிகழ்ந்த ஒரு வாகன விபத்தில் Barry Mannakee உயிரிழந்தார்.
தன்னுடன் நெருக்கமாக இருந்ததால் தான் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என டயானா அப்போது பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
இதன் பின்னர், 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி பாரீஸ் நகரில் ஒரு வாகன விபத்தில் இளவரசி டயானாவும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
