|
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தொடர்பு தொடர்பில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க புலம்பெயர் அமைப்புகள் ஐந்து மில்லியன் பவுண்ட்ஸ்களை செலவிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டன் நகரில் உள்ள பொதுமக்கள் தொடர்பாடல் நிறுவனமான டீடீஆர் நிறுவனத்தின் ஊடாக உலக நாடுகளின் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக டீடீஆர் நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியான பெண்ணொருவர் தற்போது ஜெனீவா சென்றுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களை சந்தித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் தற்போது இன்டர்நெட் ஊடான கையொப்பங்கள் சேகரிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச தொடர்பாடல் நிறுவனம் ஒன்றின் ஊடாக இவ்வாறு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றும் திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
Wednesday, 16 September 2015
![]() |
புலம்பெயர் அமைப்புகள் இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்துக்காக ஐந்து மில்லியன் பவுண்ட்ஸ் செலவு-- திவயின |
Loading...
