ஜிம்பாவே நாட்டு நாடாளுமன்றத்தில் துவக்க உரை நிகழ்த்தவந்த அந்நாட்டு அதிபர் ராபர் முகாபே, தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு உரையை படித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
கடந்த மாதம் தேசத்திற்கு முகாபே ஆற்றிய உரையையே அவர் இப்போதும் படித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
முகாபேயின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டதாக அரசுக்குச் சொந்தமான தி ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
அதிபர் முகாபே சரியான உரையை ஒரு ஹோட்டலில் வாசிப்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சரம்பா தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டிலிருந்து ராபர்ட் முகாபே அந்நாட்டின் அதிபராக இருந்துவருகிறார்.
