|
கொழும்பில் ஆட்சி பொறுப்பில் இந்தியாவிற்கு நெருக்கமான அரசாங்கம் காணப்படுவதை தொடர்ந்து இலங்கையில் துறைமுகமொன்றை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு இந்தியா மறுபடி புத்துயுர் அளித்துள்ளது. சீனாவை இந்த விடயத்தில் நெருங்குவதே அதன் நோக்கம். இது வரை காலமும் யாழ்ப்பாணத்திலுள்ள தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை தன்னிடம் அளிக்குமாறு கொழும்பை கேட்டுக்கொள்வதற்கான உரிய தருணத்திற்காக இந்தியா காத்திருந்தது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்செயலானவை அல்லது அதிர்ஸ்டத்தினால் ஏற்பட்டவை இல்லை என்பதை பாராளுமன்ற தேர்தல்கள் நிரூபித்துள்ளதை தொடர்ந்து ,இந்தியா மீண்டும் காங்கேசன்துறை துறைமுகம் குறித்து வற்புறுத்த தொடங்கியுள்ளது. இலங்கை பிரதமரின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரு நாடுகளினதும் பிரதமர்கள் மத்தியிலான உயர்மட்ட சந்திப்பின்போது இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மானம் செய்யும் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு சாதகமான விதத்தில் பதிலளித்த விக்கிரமசிங்க இலங்கை இந்த விடயத்தில் ஓத்துழைப்பை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்னமும் நிறைவேறாமலிருக்கின்ற இந்திய திட்டங்களிற்கு மீண்டும் புத்துயுர் அளிப்பது தொடர்பில் இது முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியாகும். காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மானம் செய்வது தொடர்பில்2011இலேயே இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தமொன்றை செய்திருந்தது.
அதனடிப்படையில் இரண்டு வருடங்களி;ற்குள் ஆறுகட்டங்களாக அந்த பணி முடிவடைந்திருக்கவேண்டும். விடுதலைப்புலிகளினால் தாக்குதலிற்கு உள்ளாகி சேதமடைந்துள்ள தற்போதைய துறைமுகத்திற்கு பதில் புதிய துறைமுகத்தை அமைக்கும் திட்டமும் இந்த உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது.
மேலும் 2013 ற்குள் இந்தியா நான்கு கட்டங்களை பூர்த்திசெய்திருந்தது,விடுதலைப்புலிகளினால் மூழ்கடிக்கப்பட்ட நான்கு கப்பல்களை அகற்றியிருந்தது எனினும் ஐந்தாவது கட்ட புனர்நிர்மானபணிகள் இடம்பெறவேயில்லை, அனைத்தும் ஓரு அரசியல் சூழலிலேயே இடம்பெறுகின்றது.
இலங்கை வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனது என இந்திய அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தார்.இதன் மூலம் முன்னைய அரசாங்கத்துடனான உறவே இதற்கு தடையாக உள்ளது என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை வீதிகளை அமைப்பது, மின்நிலையங்கள்,அம்பாந்தோட்டை துறைமுகம்,கொழும்பு போர்ட் சிட்ட திட்டத்தினை முன்னெடுப்பது என்ற போர்வையில் சீனா இலங்கையில் நாளுக்குநாள் பலமடைந்து வந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலில் தான் இந்தியாவிற்கு வழங்குவதற்கு முன்வந்தவேளை அந்த நாடு மறுத்துவிட்டது அதனால் தான் சீனாவிற்கு வழங்கினேன் என ராஜபக்ச தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.( அம்பாந்தோட்டை துறைமுகம் பொருளாதாரரீதியில் எவ்வளவு தூரம் நன்மையளிக்க கூடியது என்பது குறித்து இந்திய பொதுதுறை நிறுவனங்கள் மத்தியில் சந்தேகம் காணப்பட்டது) ஜனவரி தேர்தலில் சிறிசேனவின் ஆச்சரிய வெற்றி சீனாவின் கணிப்பீடுகளை பொய்யாக்கியது.
போர்ட் சிட்டி திட்டம் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.முன்யை அரசாங்கத்தின் காலத்தில் சீனாவிற்கு வழங்கப்பட்ட ஏனைய திட்டங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
|
Monday, 28 September 2015
![]() |
காங்கேசன்துறை துறைமுகத்தின் மீது மீண்டும் கண்வைக்கும் இந்தியா |
Loading...
