ஆப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடபிராந்திய தலைநகரான குந்தூஸ் மீது தாலிபன் ஆயுததாரிகள் பலமுனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திவருவதாக ஆப்கன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நகரின் அரசு மருத்துவமனைக்குள் தாக்குதலாளிகள் நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு பிராந்திய தலைநகரின் மீது தீவிரவாத ஆயுதக்குவால் நடத்தப்படும் மிக முக்கியமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
குறைந்தது நான்கு இடங்களில் அரச படைகள் இந்த தீவிரவாத ஆயுதக்குழுவினரோடு நேரடியாக சண்டையிட்டுவருவதாக அந்த பிராந்திய தலைமைக் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தாலிபன் இயக்கம் மற்ற கிளர்ச்சிக்குழுக்களுடன் இணைந்து செயற்படத்துவங்கியதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் குந்தூஸ் பிராந்தியத்தில் கடுமையான தாக்குதல்கள் பல இடம்பெற்று வருகின்றன.
