இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் அமெரிக்காவின் பல செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ராக்கெட் மூலம் இவை அனைத்தும் திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
அஸ்ட்ரோசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையமானது நட்சத்திரக் கூட்டங்களையும், தொலைதூர விண்வெளி கிரகங்களின் செயற்பாடுகளையும் விரிவாக ஆராயும்.
சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வுத்துறையில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்கிற இந்திய அரசின் தொடர் முயற்சியின் ஒருபகுதியாகவே இன்றைய இந்த வெற்றிகரமான விண்வெளி செயற்பாடுகள் பார்க்கப்படுகின்றன.
