Tuesday, 29 September 2015

இலங்கையில் சர்வதேச எரிபொருள் மத்திய நிலையம்! இந்தியா நடவடிக்கை?














எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் மின் நிலையங்களை உள்ளடக்கிய சர்வதேச எரிபொருள் மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பாரிய முதலீடுகளை முன்னெடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தி டெலிகிராப் இந்தியா என்ற சஞ்சிகையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சக்தி அமைச்சின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

2016ம் ஆண்டில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கு முன்பு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது இரண்டு நாட்டிற்கும் அத்தியாவசியமாக கருதப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...