Wednesday, 23 September 2015

வடக்கு- கிழக்கினை துரிதமாக கட்டியெழுப்ப வேண்டும்--மாவை சேனாதிராஜா

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால் பாதிக்கப் பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளை மீளக் கட்டி யெழுப்புவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், போரின் போது அழிக்கப்பட்ட தொழிற்சாலைகளையும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளையும் மீளச் செயற்பட வைப்பதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு பெருமளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும்,

வேலை இல்லாப் பிரச்சினை நாட்டின் ஏனைய பகுதிகளைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே உக்கிரமடைந்துள்ளது. கடந்த முப்பது வருடங்களாக மேற்படி பகுதிகளில் தொழில்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. போரின்போது பாரிய தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலையில்லா திண்டாட்டம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்யவும் கட்டியெழுப்பவும் வெளிநாட்டவர்களும் புலம்பெயர் உறவுகளும் முன்வந்தபோதும் முன்னைய அரசு அதற்கு இடமளிக்கவில்லை. எனவே, போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கட்டியெழுப்பவும், தொழில் வாய்ப்புகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...