Saturday, 12 September 2015

பாடசாலை மாணவர்களின் அறிவை மேம்படுத்த கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.....












புனரமைப்பு வேலைகளின் பின்னர் கோள் மண்டலம் மக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும், பாடசாலை மாணவர்களின் நட்சத்திர விஞ்ஞானம் தொடர்பான அறிவை மேம் படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு இலங்கை கோள் மண்டலத்தினுள் 510 பேருக்கான இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. கோள் மண்டலத்தை மக்கள் பார்வையிடுவதற்காக சனிக்கிழமைகளில் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தினர் கோள் மண்டலத்தை பார்வையிடுவதற்காக செவ்வாய்க்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறு திங்கள் மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் இலங்கை கோள் மண்டலம் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...