Thursday, 10 September 2015

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு உரிய பலனைத் தருமா?

தமிழகத்தில் உற்பத்தியை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை பெருக்கும் நோக்கில் அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது.
எனினும் அரசு எதிர்பார்த்த முதலீடுகள் யதார்த்த ரீதியில் வருமா எனும் கேள்விகளும் எழுந்துள்ளன.
சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பொருளாதார நிலைமைகள் ஊக்கமளிக்கும் நிலையில் இல்லை என்று கருதப்படும் வேளையில், இந்த மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி முதலீடுகள் முழுமையாக வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் தலைவர் டாக்டர். ஜோதி சிவஞானம்.
முன்னரும் பல மாநிலங்களில் இதேபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீடுகள் வரவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
உட்கட்டமைப்பு வசதிகளில் இதர மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியுள்ளது என்று கருதப்பட்டாலும், எதிர்பார்க்கப்படும் முதலீடுகளுக்கு ஏற்றவகையில் வசதிகள் மேம்படவில்லை எனவும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார்.

Loading...