Thursday, 10 September 2015

மேலும் பல பிரதி ,மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள்


நல்லாட்சி அரசாங்கத்தில் பெரும்பான்மையான அமைச்சுக்களும்,இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுக்களும் கடந்த தினங்களில் வழங்கப்பட்டுள்ள வேளையில் மீதமாக இருக்கும் அமைச்சுக்களும் எதிர் வரும் காலங்களில் வழங்கப்பட உள்ளது .

அந்த வகையில் மலையகத்தை சேர்ந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்றும் கொழும்பை சேர்ந்த எஸ்.எம். மரிக்காருக்கு பிரதியமைச்சு ஒன்றும் மற்றும் அவரது மாவட்டத்த்தில் அதிக விருப்பு வாக்கை பெற்ற புத்திக்கவுக்கு ஒரு பிரதியமைச்சும் கிடைக்க உள்ளதாகவும்   இவர்களுடன் மேலும் இருவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

மக்களால் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களை விட்டு விட்டு தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்ட  அனோமா கமகே போன்றவர்களுக்கு   ஏன் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது என மக்கள்  தங்களது  அதிதிருப்தியையும் தெரிவித்து வரும் இவ்வேளையில் இந்த தகவலின் கசிவு அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களாலும் தெரிவு செய்யப் பட்ட .எஸ்.எம்.மரிக்காருக்கு வழங்கப் படவுள்ள பிரதி அமைச்சுப் பதவி பற்றி கொழும்பு மாவட்ட மக்களும், சிவில் அமைப்புக்களும்  தங்களது நன்றியை ஜனாதிபதி க்கும்  பிரதமர் ரணிலுக்கும் தெரிவித்து வருவதாகவும் அறிய முடிகிறது.

செய்திகளுக்காக : தி.தியகனாதன் (மருதானை)




Loading...