|
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ஜெனீவா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் பங்கேற்கவுள்ளனர்.எனினும் அவர்களுக்கு புறம்பாக சிவாஜிலிங்கமும், அனந்தி சசிதரனும் தனித்து ஜெனீவா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவாஜலிங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம் என்பதை, மனித உரிமைகள்ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாமும் ஜெனீவா செல்ல வீசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் தனித்து ஜெனீவா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
|
Monday, 7 September 2015
![]() |
ஜெனீவா செல்லும் கூட்டமைப்பின் குழு தொடர்பில் குழப்பம் |
Loading...
