
நடந்து முடிந்த தேர்தலில் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல் அதாவுல்லாவை புறக் கணித்ததினால் தற்போது அக்கரைப்பற்றுக்கு எம்.பீ ஓன்று இல்லை , ஊருக்கு எம்.பி வேண்டும் என்று சம்மாந்துறை சாதித்துக் காட்டியது , ஆனால் பச்சை மடையர்கள் கட்சி தாவி தவத்தின் சொல்லைக் கேட்டு அதாவுல்லவை புறக் கணித்தது . பயன் அரசனை நம்பி புருஷனைக் கை விட்ட கதைதான். மயிலுக்குப் போட்ட 34,000 வாக்குகள் எல்லாம் நாசமாய்ப் போயிட்டு,அதை அதாவுல்லாவுக்கு அளித்திருப்பின் அவர் முக்கியமான தொரு அமைச்சுப் பதவியைப் பெற்று இருப்பார் ,அம்பாறை மாவட்டத்துக்கு மேலும் ஒரு அமைச்சர் கிடைத்து இருப்பார் .
அதாவுல்லா மீண்டும் ,மீண்டும் கூறினார் வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் மகிந்தவுக்கு அல்ல , மைத்ரிக்குதான் என்று . கடைசியில் அக்கரைப் பற்றான் மடையர்கள் ஆனதுதான் கண்ட பலன்
அப்பன் அருமை அப்பன் செத்த பின்னர் தான் தெரியும்.
அக்கரைப் பற்று நலன் விரும்பி
