Tuesday, 29 September 2015

அல் அக்ஸாவில் யூதர்கள் அத்து மீறி நுழைவதால் தொடரும் பதற்றம்

கிழக்கு ஜெரூசலம் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நேற்று இஸ்ரேல் படையினர் அத்து மீறி நுழைந்ததை அடுத்த பலஸ்தீனர்களுடன் மோதல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அல் அக்ஸா வளாகத்தில் யூதர்கள் அத்து மீறி நுழைவதால் கடந்த சில வாரங்களாக பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பதற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கிறது.

முஸ்லிம்களின் புனிதத் தலமான அல் அக்ஸா வளா கத்தை யூதர்களும் தமது புனிதத் தலமாக கருதுகின்றனர். பள்ளிவாசல் வளாகத்திற்குள் பேரணியாகச் செல்ல சிறு தீவிரவாத யூதக் குழுவொன்று கடந்த புதனன்று அழைப்பு விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக பள்ளிவாசல் வளாகத்திற்குள் முஸ்லிம்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய இஸ்ரேல் நிர்வாகம் யூதர்கள் அங்கு செல்வதற்கும் தற்காலிக தடை விதித்தது.

அண்மைக்காலத்தில் அல் அக்ஸா வளாகத்திற்கு யூதர் களின் வருகை அதிகரித்திருப்பது குறித்து அச்சத்தை வெளியிடும் பலஸ்தீனர்கள் இதன்மூலம் பள்ளிவாசல் வளாகத்தின் சட்டங்களில் இஸ்ரேல் மாற்றங்களை கொண்டுவரும் என்று பயப்படுகிறது
Loading...