|
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமையவே “வில்பத்து” வனாந்தரப் பகுதி குடியிருப்புக்களுக்கு கையளிக்கப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக காணிகள் கையளிக்கப்படவில்லை என வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அநுரஅதுருசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மர நடுகை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கமைய நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியது. யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் வில்பத்து வனாந்திரத்தில் சில பிரதேசங்களை சுத்தப்படுத்தி சட்டவிரோதமாக வசிப்பிடங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
பின்னர் இதுதொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய அவ்வாறு கைப்பற்றப்பட்ட காணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே இவை சட்டவிரோதமான வசிப்பிடங்கள் அல்ல. அதேபோன்று அரசியல் தலையீடுகளும் கிடையாது. ஆனால் இனிமேல் வில்பத்து வனாந்திரத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
எதிர்காலத்தில் இலங்கையின் வனாந்தரத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும். எனவே அத்துமீறல்களுக்கும் காடழிப்புக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
|
Tuesday, 29 September 2015
![]() |
வில்பத்து குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல – வனப்பாதுகாப்பு திணைக்களம் |
Loading...
