பாக்தாத், செப்டம்பர் 1- ஈராக்கில் நான்கு பேரை தலைகீழாகத் தொங்கவிட்டு அவர்களை உயிருடன் எரித்துக்கொன்றுள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.
மனதை உறையவைக்கும் ரத்தத்தை உறைய வகையில் அந்த வீடியோ படக்காட்சி அமைந்துள்ளது. அந்த படக்காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைக்கீழாகத் தொங்கவிடப்பட்டுள்ளனர். அந்நான்கு பேரையும், முகமூடி அணிந்த தீவிரவாதிகள் உயிரோடு எரிக்கிறார்கல். அந்நால்வரும் மரண ஓலமிடுகின்றனர்.
அந்த வீடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி, அந்த வீடியோவானது தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாக கூறுகின்றான்.
ஈராக் அரசு படையினர், எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உயிருடன் கொளுத்தினர். அதற்குப் பழிவாங்கவே இப்போது 4 பேரை நாங்கள் எரித்துக்கொள்கிறோம்” எனவும் தீவிரவாதி கூறுகிறான்.
இக்காணொளி காட்சி இணையத் தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது..
