Tuesday, 29 September 2015

அரசியலில் இருந்து ஓய்வுபெற மங்கள தீர்மானம்?


மிகப்பெரும் அதிகாரம் கொண்ட முக்கிய அமைச்சராக மங்கள சமரவீர செயற் பட்டிருந்தார்.அத்துடன் சுதந்திரக் கட்சியின் எதிர்காலத் தலைமைக்குப் பொருத்தமானவர் என்று சந்திரிக்காவால் பாராட்டப் பட்டவர்களில் இவரும் ஒருவராவார்.அதன் பின்னர் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் மங்கள சமரவீர முன்னணியில் நின்றார்.

ஜே.வி.பி.யை கூட்டணிக்குள் இழுத்து வந்து சிங்கள வாக்குகளை அதிகரிப்பதில் அவர் போட்ட வியூகமே வெற்றி அளித்தது.எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் போக்குகளில் அதிருப்தியுற்ற மங்கள சமரவீர, தனது இன்னொரு சகாவான ஸ்ரீபதி சூரியாரச்சியுடன் இணைந்து 2006ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.

அன்று தொடக்கம் மஹிந்தவின் தோல்வி வரை எதிர்க்கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் மங்களவின் பங்களிப்பும் திட்டமிடலும் பிரதான காரணிகளாக இருந்தன.தற்போதைய தேசிய அரசாங்கத்தில் மங்கள சமரவீரவுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.எனினும் சந்திரிக்கா, மஹிந்த அரசாங்கங்களில் அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது வழமையாக இருந்தது.

அந்த வகையில் தற்போதைய அமைச்சுப் பதவி குறித்து மங்கள சமரவீர கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறைந்த பட்சம் தனது ஆதரவாளர்களுக்கு எந்தவொரு தொழில்வாய்ப்பையும் வழங்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் அதிருப்தியுற்றுள்ளார்.

இதன் காரணமாக அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதில்லை என்றும் இப்போதைய அமைச்சுப் பதவியுடன் அரசியலை விட்டு ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாகவும் மங்கள சமரவீரவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...