Thursday, 17 September 2015

செய்ட் ராட் ஹுசைன் வெளியிட்ட அறிக்கை குறித்து இந்தியா கருத்து எதனையும் வெளியிடவில்லை












இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் ஹுசைன் வெளியிட்ட அறிக்கை குறித்து இந்தியா கருத்து எதனையும் வெளியிடவில்லை.எனினும் அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தைய நாடுகளும் சமர்ப்பிக்கவுள்ள யோசனையின் பின்னரே கருத்தை கூறமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய நாளிதழின் தகவல்படி, இந்திய வெளியுறவு அமைச்சு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பில் கருத்து எதனையும் இப்போதைக்கு வெளியிடாது. 30வது மனித உரிமைகள் அமர்வின் இறுதியில் அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக முன்வைக்கவுள்ள யோசனை வரைக்கும் பொறுத்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த யோசனை எதிர்வரும் 24ஆம் திகதியன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Loading...