Wednesday, 16 September 2015

சோனியா காந்தி ராகுல் காந்தி இலங்கைக்கு விஜயம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் பிரதமர் ரணில் விக்கரம சிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு வருகை தருமாறு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரம சிங்க நேற்று மாலை இந்திய பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் Dharmendra Pradhan மற்றும் ரயில்வே அமைச்சர் Suresh Prabhu ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


Loading...