Tuesday, 6 October 2015

குவைட் செல்ல முயற்சி 11 பேர் கைது

சுற்றுலா விஸாவில் குவைட் நாட்டுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் 11 பேர், நாட்டுக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவு,குடியகழ்வு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

அவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் ,அவர்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இதேவேளை, ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், சட்ட விதிமுறைப்படி வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச்செல்ல முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

இவ்வாறானவர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
Loading...