|
நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தப் பொருள் சுமார் 7 அடி அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள் தொடர்பில் முதலில் கண்டறியப்படாத நிலையில் பின்னர் வானியலாளர்கள் அது தொடர்பில் கண்டுபிடித்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகம் அல்லது அதற்குப் பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
WT1190F என பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் கடலில் விழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Tuesday, 27 October 2015
![]() |
எதிர்வரும் 13ம் திகதி காலி கடற்பரப்பில் வானில் இருந்து விழும் மர்மப் பொருள் |
Loading...
