இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, விமல் வீரவன்ஸ காலாவதியான கடவுச் சீட்டு ஒன்றை பயன்ப்டுத்தி வெளிநாடு செல்ல முயன்ற போதே குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ஸ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று போலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
