Saturday, 10 October 2015

அரசாங்கம் தமிழ் மக்களைப் பாவித்து சர்வதேச பிடியிலிருந்து தப்பிக்க முற்படுகின்றது : கஜேந்திரன்












இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாவித்து சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முற்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ அரசாங்கம் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்ற மாயைக் காட்டி சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முற்படுகின்றது. இது குறித்து தமிழ்த் தலைமைகள் விழிப்பாக இருக்க வேண்டும். இராணுவத்தைக் காப்பாற்றவும், யுத்த குற்றங்களுக்கு ஏவுதல் விடுத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


Loading...