போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏழு நாடுகள் தஞ்ச மளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 200 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சில நாடுகள் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளன.
இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என செய்துள்ள பரிந்துரையை அமுல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஓர் புலி உறுப்பினராவார்.
இந்த சந்தேகநபரை நாடு கடத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
நோர்வே, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
|
Saturday, 10 October 2015
![]() |
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்கு 7 நாடுகள் தஞ்சமளித்துள்ளது |
Loading...
23.09.2015 - Comments Disabled
16.06.2015 - Comments Disabled
27.06.2015 - Comments Disabled
16.03.2017 - Comments Disabled
07.05.2015 - Comments Disabled