Sunday, 25 October 2015

மகிந்தவின் அதிசொகுசு மாளிகையை பார்வையிட்டனர் ஊடகவியலாளர்கள்

மகிந்தவின் அதிசொகுசு மாளிகையை பார்வையிட்டனர் ஊடகவியலாளர்கள்
மகிந்தவின் அதிசொகுசு மாளிகையை பார்வையிட்டனர் ஊடகவியலாளர்கள்
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று முன்தினம் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதவிக் காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்ல நேரத்தையும் மகிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.
மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசியக் குறியீடுகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து இரகசியக் குறியீட்டின் மூலம் கூடத்திறக்க முடியாதளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஏ.சி.வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக் காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள் ளடங்கியிருந்தன.
மாளிகையின் மேற்புறம் நிலமட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தமிழ் ஊடக அதிகாரி ஆர்.எப்.அஷ்ரப் அலீயும் இந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் ஊடகவியலாளராக நிலக்கீழ் அதி சொகுசு மாளிகையை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.                 
Loading...