Sunday, 25 October 2015

வெளிநாட்டு வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் பிரமுகர்கள் பற்றி தகவல் வழங்குபவர்க்கு சன்மானம்
வெளிநாட்டு வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் பிரமுகர்கள் பற்றி தகவல் வழங்குபவர்க்கு சன்மானம்
வெளிநாட்டு வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் அரசியல் பிரமுகர்களின் விபரம் பற்றி தகவல் வழங்கினால், மொத்த வைப்புப் பணத்தில் மூன்று வீதத்தை சன்மானமாக வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணம் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், தகவல் வழங்கியோருக்கான சன்மானத்தை வழங்குவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துபாய் தேசிய வங்கியில், இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் பெருந்தொகை பணத்தை வைப்புச் செய்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே வழங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிதிக் குற்ற தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் இதுகுறித்து துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோதும், இலங்கையில் எந்தவிதமான வழக்குகளும் இல்லாமல் அதனை நிரூபிக்காத நிலையில், வங்கிக் கணக்கின் தகவலை வழங்க துபாய் வங்கி மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இலங்கையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, குறித்த தகவல்கள் நிரூபிக்கப்படும் பட்சத்திலேயே துபாய் வங்கியிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.
Loading...