Friday, 2 October 2015

ஜி எஸ் பி வரிச்சலுகை மீண்டும் பெற்றுக்கொள்ளப்படும்-- ரணில்












ஜி எஸ் பி வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற குறித்த வரிச்சலுகையினை முன்னைய அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் மூலம் இல்லாமல் செய்துக்கொண்டது.

ஆனால் குறித்த வரிச்சலுகை கிடைக்குமாயின் இலங்கையில் வேலையின்மை வீதம் குறைவடைந்து பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வீதம் அதிகரிக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். ஜி எஸ் பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் இரு தினங்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்,

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுக்களில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜீ எஸ் பி வரிச்சலுகையினை மீளப்பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையினை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...