Friday, 2 October 2015

ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள்--நிமால் சிறிபால

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது பல பிரச்சினைகள் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையில் நீதித்துறைக்குள் இருந்துக்கொண்டு இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது சிக்கல்கள் ஏற்படும் என்று கட்சியின் பிரதிதலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதி உயர்நீதிமன்றமாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது. இந்தநிலையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளின்படி ஹைபிரைட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க, நீதித்துறையில் புதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனினும் அதனை ஒரே இரவில் செய்துவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...