Wednesday, 14 October 2015

ஆறு அரசியல் கட்சிகளை மட்டுமே நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும்! சபாநாயகர்- கரு ஜயசூரிய

ஆறு அரசியல் கட்சிகளை மட்டுமே நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எட்டாம் நாடாளுமன்றின் அங்கம் வகிக்கும் மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஆறாகும்.
நாடாளுமன்றில் 17 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.
எனினும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவான அனைத்து உறுப்பினர்களும் ஆறு அரசியல் கட்சிகளின் கீழ் போட்டியிட்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்றில் சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டும், உரைகளை நிகழ்த்த நேரம் ஒதுக்கப்பட வேண்டமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஸ் குணவர்தனவின் தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சந்தர்ப்பம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் எனவும், நாடாளுமன்றின் மரபுகளுக்கு புறம்பான வகையில் செயற்பட முடியாது எனவும் கரு ஜயசூரிய முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஆளும் கட்சி இவ்வாறு சந்தர்ப்பம் மறுத்து வருவதாக சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
Loading...
  • 6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு03.05.2015 - Comments Disabled
  • இலங்கையில் புதுரக வைரஸ் காய்ச்சலுக்கு 9 கர்ப்பிணிகள் பலி19.06.2015 - Comments Disabled
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா?12.04.2016 - Comments Disabled
  • It’s Morning In Sri Lanka25.12.2015 - Comments Disabled
  • மையவாடிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் ஹசன் அலி01.03.2017 - Comments Disabled