Saturday, 31 October 2015

பூமியை அண்மித்து இன்றிரவு விண்பொருள் நகர்வு









பூமியை அண்மித்து இன்றிரவு விண்பொருள் நகர்வு ஏற்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விண் பொருள் சுமார் 400 மீற்றர் அகலமுடையது என்பதுடன், சந்திரனின் சுற்றுப் பாதைக்கு சற்று தொலைவில் நகர்ந்து செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புவிக்கும், சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போன்று 1.3 மடங்கு தொலைவில், பூமிக்கு அப்பால் செக்கனுக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் இந்த விண்பொருள் நகர்ந்து செல்லும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

புவி அல்லது சந்திரனில் இந்த விண்பொருள் மோதுவதற்கான வாய்ப்புகள் இல்லை யென்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதுகுறித்து அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இலங்கை விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விண்பொருளுக்கு 2015 TB 145 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை விண்வெளி ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் பிரியங்கா கோரளகம தெரிவித்துள்ளார்.
Loading...