புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் தீர்மானித்துள்ளனர். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற் கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, திருமதி அடேல் பாலசிங்கம் சிறுபராய சிறுமிகளை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டமை மற்றும் அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்க விட்டமை என்பன குறித்த விடயங்கள் இந்த குற்றச்சாட்டில் உள்ளடக்கப் படவிருக்கின்றன.
பத்துக் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன் வைக்கப் படவிருக்கின்றன.
இது தொடர்பாக நாங்கள் ஜெனீவா அமர்வின் போதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தோம். ஆனால் யாரும் அதனை பொருட் படுத்தவில்லை என்று புலம்பெயர் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அடேல் பாலசிங்கம் தற்போது இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுள்ளார் என்றும் திவயின செய்தி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
|
Saturday, 31 October 2015
![]() |
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு |
Loading...
14.08.2015 - Comments Disabled
20.06.2015 - Comments Disabled
20.06.2015 - Comments Disabled
13.08.2015 - Comments Disabled
18.01.2016 - Comments Disabled