Friday, 9 October 2015

எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்










2014 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக வெட்டுப் புள்ளிகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. இதன் போது சித்தியடைந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவாகியுள்ள அனைத்து பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த முறை உயர்தரப் பரீட்சைக்கு 247,376 பேர் தோற்றியிருந்ததுடன், அவர்களில் 24,343 பேர் சாதாரண அனுமதியின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்
Loading...