|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிஇ ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையே மஹிந்தவிற்கும் ஏற்பட்டிருக்கும் என சமூக வலுவுட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேவையில் இலங்கை தொடர்பாக முன்னெக்கப்பட்ட விசாரனை நடவடிக்கை மிகவும் வலுபெற்றிருந்தது. அவ்வாறான நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஒன்றுக்கு அறிவித்தல் விடுத்து சக்திமிக்கதான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி குறித்த பிரச்சினைகளை கையாள திட்டமிட்டிருந்தார். மஹிந்தவின் திட்டத்தின் படி அன்றைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் எமது நாடு சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிட்டிருப்பதோடு சர்வதேச நாடுகளின் நாட்புறவையும் இழந்திருப்போம். மறுபுறம் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி, ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இவருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.’ என்றும் கூறினார்.
|
Friday, 9 October 2015
![]() |
மஹிந்த வெற்றியீட்டியிருந்தால் கடாபியைப் போல் கொல்லப்பட்டிருப்பார்-- எஸ்.பி திஸாநாயக்க |
Loading...
