Saturday, 31 October 2015

வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான நாட்கள் அதிகரிக்கப்படக் கூடாது: ஜே.வி.பி














வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான நாட்கள் அதிகரிக்கப்படக் கூடாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 7 நாட்களை 12 நாட்களாக உயர்த்தும் யோசனையை கடுமையாக எதிர்ப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர் என்ற ரீதியில் இந்த யோசனையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் விவாதத்திற்கான நாட்களை ஒதுக்கும் தீர்மானத்தை ஒத்தி வைப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் எதிர்ப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிலையியற் கட்டளை 70(4) இன் அடிப்படையில் இரண்டாம் வாசிப்பிற்காக அதிகபட்சமாக 7 நாட்களை மட்டுமே ஒதுக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்து நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் விவாதத்திற்கான நாட்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...