Friday, 9 October 2015

புகைத்தல் இறப்புகள் சீனாவில் கணிசமாக அதிகரிக்கும்

2030ஆம் ஆண்டளவில் சீனாவில் புகைத்தல் தொடர்பான சுகயீனங்களால் வருடாந்தம் 20 லட்சம் பேர் இறப்பார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
புகைத்தல் இறப்புகள் சீனாவில் கணிசமாக அதிகரிக்கும்Image copyrightAP
Image captionபுகைத்தல் இறப்புகள் சீனாவில் கணிசமாக அதிகரிக்கும்
இது தற்போதை அளவைவிட இரு மடங்கு அதிகமாகும்.
சீன ஆண்களில் மூன்றில் இருவர் புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், அவர்கள்தான் இதனால் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்குவதாக லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வு கூறுகின்றது.
இந்த வீதம் அண்மைய வருடங்களில் அதிகரித்துள்ளது. பல லட்சக்கணக்கானோரிடம் 15 ஆண்டுகால இடைவெளியில் இரு தடவைகள் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாரகள்.
உலகளவில் புகைத்தலால், வருடாந்தம் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறக்கிறார்கள்.
Loading...