Wednesday, 14 October 2015

ஆரோக்கியமாக செயல்பட சாப்பிடுங்க கொண்டைக்கடலை

ஆரோக்கியமாக செயல்பட சாப்பிடுங்க கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவி புரிகிறது. இங்கு அந்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

sl1012
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும் கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
5
மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும்.
bengal_gram
 பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம்.
sl138
ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம்.
08-spinachchickpeas
இதய ஆரோக்கியம் கொண்டைக்கடலையை தொடர்ந்து எடுத்து வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
Loading...