Wednesday, 14 October 2015

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இளநீர்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இளநீர்

கர்ப்பிணிகள் இளநீர் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ள காரணத்தினால். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
coconut_003
இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீர்
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

c80ea3f7-5838-4e23-bb93-bcfa6c005b54_S_secvpf
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும்.
ilaneer
அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்கபடுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...