Tuesday, 13 October 2015

எறும்புகளை உண்டு உயிர் தப்பிய ஆஸ்திரேலியர்

Image captionஆஸ்திரேலிய பாலைவனப் பிரதேசத்தின் ஊடாகச் செல்லும் ஒரு சாலை
ஆஸ்திரேலியாவின் "அவுட்பேக்" என்ற பெரிய பாலைவனப் பிரதேசத்தில் வேட்டையாடச் சென்று ஆறு நாட்கள் காணாமல் போன ஆஸ்திரேலியர் ஒருவர், தான் எப்படி உணவோ அல்லது தண்ணீரோ இல்லாமல் , கறுப்பு எறும்புகளை மட்டும் உண்டு உயிர் தப்பினேன் என்பதை விவரித்திருக்கிறார்.
ரெஜினால்ட் ஃபாகர்டி என்ற இந்த 62 வயதான ஓய்வு பெற்ற சுரங்கத் தொழிலாளி, ஒரு ஒட்டகத்தைத் துரத்திச் சென்ற போது திசை தவறிவிட்டார்.
பின்னர் அவரது காலடித் தடத்தை பின் தொடர்ந்த மீட்புப் பணியாளர்கள் குழு ஒன்று, அவரை நீர்ச்சத்து உடலில் குறைந்த நிலையில், கண்டுபிடித்தது.
அவர் சென்ற முகாமிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஒரு மரத்தின் அடியில் களைப்பால் படுத்துக் கிடந்தபோது தான் எறும்புகளை உண்டதாக அவர் போலிசாரிடம் கூறினார்.
Loading...